Thursday, December 31, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 28

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 28

கேள்விக்கான பதில்களை ஸுரா 58 வசனம் 1 முதல் ஸுரா 66 வசனம் 12 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 7 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 28.1 இப்பகுதியில் அல்லாஹ்வின் 8 திருநாமங்கள் ஒரே வசனத்தில் கூறப்பட்டுள்ளன.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.2 ஜும்மா தொழுகையின் அதானுக்குப் பின் வியாபர்ரம் செய்யலாம்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.3 “ரப்புல் ஆலமீனான அல்லாஹ்விற்க்கு நான் பயப்படுகிறேன்”- இது யாருடைய கூற்று?

a) மாலிக்

b) ஜிப்ரீல்

c) ஷைத்தான்

d) ஆதம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.4 ஈஸா நபி தனக்குப் பின் ----- எனும் பெயருள்ள நபி வருவார் எனக் கூறினார்.

a) அஹ்மத்

b) மஹ்தி

c) யஹ்யா

d) மூஸா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.5 அல்லாஹ்வை விட்டும் தங்களை ---- தடுத்துக் கொள்ளும் என காஃபிரான வேதக்காரர்கள் எண்ணினர்.

a) சிலைகள்

b) அகழ்

c) வேதம்

d) கோட்டைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.6 உஸ்வத்துல் ஹஸனா ( அழகிய முன் மாதிரி) யாரிடம் உள்ளது?

a) இப்ராஹிம் நபி

b) இப்ராஹிம் நபியுடன் இருந்தவர்கள்

c) ஈஸா நபி

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.7 ------ ஒரு சோதனையாகும்.

a) செல்வம்

b) பிள்ளைகள்

c) போர்

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.8 நபியே நீர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடுவதும் , தேடாமலிருப்பதும் ஒன்றுதான்”- இங்கு அவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் யார்?

a) காஃபிர்கள்

b) முனாபிக்கள்

c) ஷஹீதுகள்

d) நபியின் முன்னோர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.9 விசுவாசிகளே! ----ஐயும் , ----ஐயும் கொண்டு இரகசியம் பேசுங்கள்.

a) ரஹ்மத் ,,,,, தக்வா

b) நன்மை ,,,,,, உண்மை

c) நன்மை ,,,,,, தக்வா

d) ஈமான்,,,,, தக்வா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.10 நூஹ் நபியின் மனைவி விசுவாசிகளில் ஒருவர்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.11 நீங்கள் பிரகாசத்தையும் ( நூர்) விசுவாசியுங்கள்- இங்கு நூர் என்பது --- ஆகும்

a) ஜிப்ரீல்

b) முஹம்மது நபி

c) குர்ஆன்

d) சுவனம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.12 “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோம்எனக் கூறியது யார்?

a) யூதர்கள்

b) முனாஃபிக்கள்

c) விசுவாசிகள்

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.13 நாங்கள் அன்ஸாருல்லாஹ் ( அல்லாஹ்வின் உதவியாளர்கள்) எனக் கூறியது யார்?

a) மதீனாவாசிகள்

b) மலக்குகள்

c) ஈஸா நபியின் சீடர்கள்

d) யூதர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.14 ஒரு பெண் -----ஐப் பற்றி நபியிடம் தர்க்கித்து , அல்லாஹ்விடமும் முறையிட்டாள்.

a) தந்தை

b) கணவன்

c) மைந்தன்

d) சகோதரன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.15 குர்ஆன் மலை மீது இறக்கப்பட்டிருந்தால் ------ஆல் மலை பிளந்துவிடும்.

a) ரஹ்மத்தில்லாஹ்

b) ஹஷியத்தில்லாஹ்

c) பரக்கத்தில்லாஹ்

d) அம்ருல்லாஹ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment