Thursday, December 17, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 26

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 26

கேள்விக்கான பதில்களை ஸுரா 46 வசனம் 1 முதல் ஸுரா 51 வசனம் 30 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 24 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 26.1 மணல் குன்றுகளிலிருந்து எச்சரிக்கப்பட்ட சமுதாயம்

a) ஸமூது

b) ஆது

c) மத்யன்

d) காரியா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.2 ----- ஐ ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயத்தில் பூட்டு உள்ளதா?

a) வானம்

b) சுவனம்

c) ஒட்டகம்

d) குர்ஆன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.3 பரிகாசமான பட்டப் பெயர்களால் மற்றொரு விசுவாசியை அழைக்கலாம்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.4 அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கிறது.- இங்கு அவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள்

a) போரில் எதிரியை வெட்டுவோர்

b) தானம் செய்வோர்

c) நபியிடம் வாக்குறுதி செய்தோர்

d) ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல் எறிவோர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.5 “எங்களுடைய கூட்டத்தாரே! நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம்.அது நேர்வழியின் பால் வழிகாட்டுகிறதுஎனக் கூறியது

a) மதீனாவாசிகள்

b) தாயிஃப்வாசிகள்

c) ஜின்கள்

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.6 முஹம்மது நபியின் சப்தத்தை விட தன் சப்தத்தை உயர்த்தி யாரேனும் பேசினால்

a) செயல்கள் அழிந்துவிடும்

b) நாக்கு அழுகிவிடும்

c) மரணம் சமீபமாகும்

d) மறுமையில் நாக்கில் சூடு இடப்படும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.7 முஹம்மது நபியின் முன்,பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.8 குழந்தையை கர்ப்பத்தில் சுமக்கும் காலம் + பால்குடி காலம்

a) 36 மாதங்கள்

b) 30 மாதங்கள்

c) 40 மாதங்கள்

d) 18 மாதங்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.9 மனிதனின் ----- ஐ விட மிகச்சமீபமாக அல்லாஹ் உள்ளான்

a) கல்ப்

b) ஜிஸ்ம்

c) ஹப்லில் வரீத்

d) யத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.10 ----- அடியில் பைஅத் செய்தோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.அமைதியை இறக்கினான்.

a) கிணறு

b) மரம்

c) கஃபா

d) குகை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.11 தங்களை நோக்கி வரும் வேதனை தரும் காற்றை ---- என ஆது கூட்டத்தினர் நினைத்தனர்

a) பறவைக் கூட்டம்

b) தென்றல் காற்று

c) மழை மேகம்

d) புயல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.12 நேர்வழி தெளிவான பின்னரும் புறக்கணிப்பவர்களின் ----ல் மரணத்தின் போது அடிக்கப்படும்

a) முகம்

b) முதுகு

c) நெஞ்சம்

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.13 இன்னும் அதிகமாக ஏதேனுமுண்டா? இது யாரின் கூற்று?

a) கிராமன் காத்திபீன்

b) ஜிப்ரீல்

c) மாலிக்

d) நரகம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.14 இறந்த தன் சகோதரரின் மாமிசத்தைச் சாப்பிடுபவர்- இது எதன் உதாரணம்?

a) வட்டி உண்பவர்

b) புறம் பேசுபவர்

c) அனாதையின் செல்வத்தை உண்பவர்

d) போரிடாமல் கனீமத்பொருளை வேண்டுபவர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 26.15 முஹம்மது நபியின் தோழர்கள் பற்றி தவ்ராத் மற்றும் இன்ஜீலில் உதாரணம் கூறப்பட்டுள்ளது

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment