Thursday, December 3, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 24

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 24

கேள்விக்கான பதில்களை ஸுரா 39 வசனம் 32 முதல் ஸுரா 41 வசனம் 46 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 10 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 24.1 எல்லா ரஸுல்மார்களின் வரலாறும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.2 மறுமை நாளில் ------ அல்லாஹ்வின் வலக்கையில் சுருட்டப்பட்டவையாக இருக்கும்

a) சுவனம்

b) வானங்கள்

c) பதிவேடு

d) மீஸான் தராசு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.3 மனிதனுக்கு அல்லாஹ் ஓர் அருட்கொடையை வழங்கினால் அம்மனிதன்

a) தொழுகையைப் பேணுகிறான்

b) அவசரப்படுகிறான்

c) “தன் அறிவினால் உண்டானதுஎன்கிறான்

d) மறந்துவிடுகிறான்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.4 -----நபிக்குப் பின்னர் வேறு தூதர் வரமாட்டார் என பிர்அவ்னின் கூட்டம் நம்பியது

a) இப்ராஹிம்

b) மூஸா

c) யாகூப்

d) யூஸுப்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.5 நரகக் காவலர்களின் கூற்று எது?

a) உங்களிடம் தூதர் வரவில்லையா?

b) உங்களிடம் எச்சரிப்பவர் வரவில்லையா?

c) நரகத்தில் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.6 வானங்கள் மற்றும் பூமியின் சாவிகள் ----- இடத்தில் உள்ளன.

a) ஜிப்ரீல்

b) பைதுல் மஃமூர்

c) அல்லாஹ்

d) b & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.7 ரப்பே! ---- முறை எங்களை மரணிக்கச் செய்தாய். ----முறை எங்களை உயிர்பித்தாய்.

a) ஒரு ,,,,, இரு

b) இரு ,,,,, ஒரு

c) பல ,,,,, ஒரு

d) இரு ,,,,, இரு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.8 நித்திரையின் போது நம் உயிர் கைப்பற்றப்பட்டு பின்பு திருப்பி அனுப்பப்படுகிறது.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.9 வேதனையை ஒருநாளேனும் இலேசாக்க வேண்டி உங்கள் ரப்பிடம் துஆச் செய்யுங்கள்என யார் , யாரிடம் கேட்பர்?

a) நரகவாசி ,,,, நபிமார்கள்

b) பலவீனர் ,,,, பெருமையடிப்பவர்

c) நரகவாசி ,,,,, நரகக் காவலர்

d) நரகவாசி ,,,, சுவனவாசி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.10 வானம் முதலில் ---- ஆக இருந்தது

a) நஜ்ம்

b) ஸம்ஸ்

c) துகான்

d) அணு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.11 அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ன செய்கின்றனர்?

a) இரட்சகனைத் துதி செய்கின்றனர்

b) இரட்சகனை விசுவாசிக்கின்றனர்

c) விசுவாசிகளுக்காக துஆச் செய்கின்றனர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.12 ----- லிருந்து நம்பிக்கையிழந்தோராக நாம் ஆகி விடக்கூடாது.

a) கலாமுல்லாஹ்

b) ஜன்னத்

c) கைருல்லாஹ்

d) ரஹ்மத்தில்லாஹ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.13 அல்லாஹ் ஏதேனும் காரியத்தைச் செய்யத் தீர்மானித்தால் ---- எனக் கூறுவான்

a) குன்

b) கைர்

c) தய்யிப்

d) கலக்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.14 நபியாக இருந்தாலும் அல்லாஹ்விற்கு இணைவைத்தால் அமல்கள் அழிந்துவிடும்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 24.15 சொல்லால் மிக்க அழகானவர் யார்?

a) அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைப்பவர்

b) நற்செயல்கள் செய்பவர்

c) நான் முஸ்லிம்களில் உள்ளேன் எனக்கூறுபவர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment