Thursday, December 24, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 27

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 27

கேள்விக்கான பதில்களை ஸுரா 51 வசனம் 31 முதல் ஸுரா 57 வசனம் 29 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 27.1 மனிதன் படைக்கப்பட்டது

a) அல்லாஹ்வை வணங்குவதற்க்காக

b) சோதனைக்காக

c) வீணுக்காக

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.2 நாம் ----ஐ எளிதாக்கி இருக்கிறோம். படிப்பினை பெறுபவர் உண்டா?

a) குர்ஆன்

b) தொழுகை

c) திக்ர்

d) வானம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.3 அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கொடுத்தால்

a) 7 மடங்காக்கப்படும்

b) 2 மடங்காக்கப்படும்

c) 10 மடங்காக்கப்படும்

d) 700 மடங்காக்கப்படும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.4 இறுதிநாளின் போது வானத்தின் நிறத்திற்கான உதாரணம்

a) சூடான கம்பி

b) ரோஜா

c) உருக்கிய தங்கம்

d) பெரு நெருப்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.5 முஹம்மது நபி ஜிப்ரீலை முழு வடிவில் கண்டது எங்கு?

a) பத்ர் போர்க்களம்

b) தவ்ர் குகை

c) ஸித்ரத்துல் முன்தஹா அருகில்

d) b & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.6 பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகள் –இது எதன் உதாரணம்?

a) மறுமையில் கப்ரிலிருந்து வெளியேறுபவர்கள்

b) காஃபிர்களின் செயல்கள்

c) நட்சத்திரங்கள்

d) முனாஃபிக்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.7 பரிசுத்தமானவர்கள் தவிர மற்றவர்கள் இதனைத் தொட மாட்டார்கள். – இங்கு இதனை எனக் குறிப்பிடப்படுவது

a) ஸித்ரத்துல் முன்தஹா

b) இஸ்தப்ரக்

c) குர்ஆன்

d) ஸிஅரா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.8 மிகக் கடின பலமுடையவர் ( ஸதீதுல் குவா) , அழகானத் தோற்றமுடையவர் (தூமிர்ரத்)

a) முஹம்மது நபி

b) ஜிப்ரீல்

c) யூஸுப் நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.9 மறுமையில் இவர்களுக்கிடையில் வாசலுடைய தடுப்புச்சுவர் எழுப்பப்படும்.

a) பிர்தவ்ஸ்வாசிகள்,,,,,,, மற்ற சுவனவாசிகள்

b) பெருமையடிப்பவர்கள்,,,,, பலகீனமானவர்கள்

c) மனிதர்கள் ,,,,,, ஜின்கள்

d) விசுவாசிகள் ,,,,,, முனாஃபிக்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.10 சுவனச் சோலையின் நிறம்

a) கரும்பச்சை

b) நீலம்

c) மஞ்சள்

d) சிவப்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.11 மக்கா காஃபிர்களின் கடவுள்

a) லாத்

b) உஸ்ஸா

c) மனாத்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.12 மறுமையில் மனிதர்கள் ----- வகையினராக இருப்பர்

a) 2

b) 3

c) 72

d) 999

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.13 ---- ன் மீது சத்தியமாக

a) நட்சத்திரங்கள் மறையுமிடம்

b) பைத்துல் மஃமூர்

c) பஹ்ரில் மஸ்ஜீர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.14 ஈஸா நபியின் சீடர்களுக்கு அல்லாஹ் துறவறத்தைக் கடமையாக்கினான்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 27.15 ---- கீழ் திசைகளுக்கும் இரட்சகன் அல்லாஹ்

a) 1

b) 2

c) 3

d) 4

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment