Wednesday, December 9, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 25

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 25

கேள்விக்கான பதில்களை ஸுரா 41 வசனம் 47 முதல் ஸுரா 45 வசனம் 37 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 17 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 25.1 உம்முல் குரா ( நகரங்களின் தாய்) என சிறப்பிக்கப்படுவது ஜெருசலேம் ஆகும்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.2 நமக்கு ஒருவர் ஒரு தீங்கு செய்தால்

a) அதே அளவு அவருக்கு தீங்கிழைக்கலாம்

b) அதைவிட அதிக அளவு தீங்கிழைக்கலாம்

c) மன்னித்து விடலாம்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.3 அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை புறக்கணிப்போரின் தோழன்

a) யூதர்கள்

b) காஃபிர்கள்

c) முனாஃபிக்

d) ஷைத்தான்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.4 நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள்என யாருக்கு அறிவிக்கப்பட்டது

a) முஹம்மது நபி

b) இப்ராஹிம் நபி

c) மூஸா நபி , ஈஸா நபி

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.5 இப்பகுதியில் அல்லாஹ் நமக்கு பிரயாணத் துஆவைக் கற்றுக் கொடுத்துள்ளான்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.6 ------- மறுமை நாளின் அத்தாட்சி

a) ஈஸா நபி

b) முஹம்மது நபி

c) மஹ்தி

d) உயரமான வீடுகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.7 மனிதன் நம்பிக்கை இழந்தவனாக(யஊஸுன்), நிராசையானவனாக(கனூதுன்) ஆவது எப்போது?

a) நரகத்தை காணும்போது

b) தீமை, கெடுதி தீண்டும்போது

c) மரணம் நெருங்கும்போது

d) மஹ்ஷரில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.8 குர்ஆனை ------- இல் இறக்கி வைத்தோம்

a) லைலத்துன் முபாரக்

b) ஜபலுந்நூர்

c) கல்ப்

d) தைளர் குகை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.9 கண்மூடித்தனமாக நமது மூதாதையரின் வழியைப் பின்பற்றுவதை அல்லாஹ் கண்டிக்கிறான்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.10 அல்லாஹ் மனிதர்களுடன் பேச விரும்பினால் அவன் பயன்படுத்தும் முறை

a) வஹி

b) தூதரின் மூலம்

c) திரைக்கு அப்பாலிருந்து

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.11 நரகக் காவலர் / பொறுப்பாளர்

a) ரய்யான்

b) மாலிக்

c) நாரன்

d) காலித்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.12 துப்பஃஉ என்பது

a) சுவனத்தின் மரம்

b) அழிக்கப்பட்ட சமுதாயம்

c) நரகத்தின் சுடுநீர்

d) ஒரு சிலை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.13 இப்பகுதியில் ------ மலைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

a) மலக்குகளின் இறக்கை

b) தஜ்ஜாலின் கைகள்

c) கப்பல்

d) மேகம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.14 -----ல் உள்ள பெரிய மனிதரின் மீது குர்ஆன் இறக்கியருளப்பட்டிருக்கக் கூடாதா? என நிராகரிப்போர் கூறுகின்றனர்

a) அரேபியா

b) இரு ஊர்கள்

c) குரைஷிகள்

d) யூதர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 25.15 அல்லாஹ் மனிதனுக்கு வசப்படுத்தி தந்துள்ளது

a) கடல்

b) வானங்களில் உள்ளவை

c) பூமியில் உள்ளவை

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment