Thursday, August 6, 2009

இறுதி வேதம் - போட்டி -ஜுஸ்வு 8

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 8

கேள்விக்கான பதில்களை ஸுரா 6 வசனம் 119 முதல் ஸுரா 7 வசனம் 87 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 13 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 8.1 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை

a) இஸ்லாத்திற்காக விரிவாக்குகிறான்

b) பிரகாசமாக்குகிறான்

c) இலேசாக்குகிறான்

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.2 நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவனாக இருக்கிறேன்”- கூறியது

a) மூஸா நபி

b) இப்லீஸ்

c) ஸாலிஹ் நபி

d) லூத் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.3 விரிந்த தேகத்தையுடையவர்கள்

a) பனீ இஸ்ராயீல்

b) ஸமூது

c) ஆது

d) சிகரவாசிகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.4 கால்நடைகளின் வயிற்றிலுள்ளவை ------க்கு சொந்தம் என வழிதவறியோர் கூறுகின்றனர்

a) சிலைகளுக்கு

b) ஜின்களுக்கு

c) புரோகிதர்களுக்கு

d) ஆண்களுக்கு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.5 பெண் ஒட்டகம் அத்தாட்சியாக அனுப்ப பட்டது எந்த கூட்டத்திற்கு

a) ஆது

b) ஸமூது

c) லூத்

d) மத்யன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.6 எங்கள் இரட்சகனே! எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம் கூறுவது

a) மனித இனம்

b) ஜின் இனம்

c) ஸமூது

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.7 “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்“ கூறியது

a) நூஹ் நபி

b) ஹுத் நபி

c) ஸாலிஹ் நபி

d) ஷுஹைப் நபி

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.8 யூதர்கள் மீது தடை செய்யப் பட்டது

a) மாட்டின் முதுகு சுமந்துள்ள கொழுப்பு

b) நகத்தையுடைய அனைத்தும்

c) ஆட்டின் எலும்போடு கலந்தவை

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.9 ஸமூது கூட்டம் அழிக்கப்பட்டது எதனால்?

a) கல்மாரி

b) வெள்ளம்

c) புயல் காற்று

d) பூகம்பம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.10 “அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்என சுவனவாசிகளை நோக்கி கூறுபவர்

a) ஜிப்ரீல்

b) மீக்காயீல்

c) சிகரவாசிகள்

d) மாலிக்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.11 ஆது கூட்டத்தினரின் நபி

a) ஹுத்

b) ஆத்

c) ஸமூத்

d) லூத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.12 ---- மற்றும் ----- ல் ஒரு பாகத்தை அல்லாஹ்விற்கென்றும் இணையாளர்களுக்கென்றும் அநியாயகாரர்கள் பிரிக்கின்றனர்

a) விளைச்சல் , குழந்தைகள்

b) விளைச்சல் , கால்நடைகள்

c) குழந்தைகள் , கால்நடைகள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.13 உங்கள் இரட்சகனை ----ஆகவும் -----ஆகவும் அழையுங்கள்

a) சத்தமாக , மெதுவாக

b) பணிவு , மெதுவாக

c) உறுதி , சத்தமாக

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.14 மிக்க மேலான ஆடை

a) தர்மம் செய்த ஆடை

b) உடுத்தி கிழித்த ஆடை

c) ஹலாலான பொருளால் வாங்கிய ஆடை

d) பயபக்தி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 8.15 ஒரு நன்மை செய்தால்

a) 10 நன்மை உண்டு

b) 1 நன்மை உண்டு

c) 70 நன்மை உண்டு

d) 100 நன்மை உண்டு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment