Friday, August 21, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 10

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 10
கேள்விக்கான பதில்களை ஸுரா 8 வசனம் 41 முதல் ஸுரா 9 வசனம் 93 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 27 , 2009.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 10.1 போரின் வெற்றி பொருளில் (கனீமத்) ---- பாகம் அல்லாஹ் மற்றும் ரஸுலுக்கு உரியது
a) 1/10
b) 1/8
c) 1/5
d) 1/2
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.2 உஜைர்
a) யூதர்கள் அல்லாஹ்வின் மகனாக கூறுவது
b) ரோமர்களின் கடவுள்
c) இப்ராஹிம் நபியின் தந்தை
d) மக்கா காஃபிர்களின் ஒரு கடவுள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.3 தங்கள் இதயத்தில் உள்ளவற்றை பற்றி அத்தியாயம் இறக்கப்படுவதை ---- பயப்படுகின்றனர்
a) யூதர்கள்
b) கா.பிர்கள்
c) முனாபிஃக்கள்
d) முஸ்லிம்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.4 விசாலமான பூமி விசுவாசிகளுக்கு நெருக்கடியாக்கப்பட்டது எப்போது?
a) உஹது யுத்தம்
b) ஹுனைன் யுத்தம்
c) பத்ர் யுத்தம்
d) தபூக் யுத்தம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.5 “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிக கடுமையானது” – யார் , யாரிடம் கூற வேண்டும்?
a) முஹம்மது நபி ,போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
b) விசுவாசிகள் , போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
c) மலக்குகள், போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
d) அனைத்தும்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.6 நிராகரிப்போரின் ---- மற்றும் ---- நபியை வியப்படைய செய்ய வேண்டாம்
a) கால்நடைகள் ,செல்வங்கள்
b) கால்நடைகள் ,மக்கள்
c) செல்வம் ,மக்கள்
d) வீடுகள் , மக்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.7 பத்ர் யுத்தத்தில் நபியின் கனவில் காஃபிர்கள்
a) குறைவான அளவில் காட்டப் பட்டனர்
b) அதிகமான அளவில் காட்டப் பட்டனர்
c) தோற்பது காட்டப்பட்டது
d) a & c
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.8 நபிக்கு இரத்தத்தை பூமியில் ஓட்டாமல் போர்கைதி இருக்க கூடாது
a) சரி
b) தவறு
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.9 விசுவாசிகளுக்கு அருளாக உள்ளவர்
a) ஷஹீது
b) முஹம்மது நபி
c) ஜிப்ரீல்
d) தர்மம் செய்பவர்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.10 -----ஐ விட -----ஐ அல்லாஹ் மேலோங்க செய்துவிட்டான்
a) எல்லா நபிகள் ,,, முஹம்மது நபி
b) எல்லா மார்க்கம் ,,, இஸ்லாம்
c) எல்லா மனிதர் ,,, விசுவாசிகள்
d) எல்லா வேதம் ,,, குர்ஆன்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.11 “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என கூறியது
a) காஃபிர்கள்
b) ஷைத்தான்
c) மலக்குகள்
d) முனாஃபிக்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.12 முனாஃபிக்களுக்கு ----- தடவை நபி பாவமன்னிப்பு கோரினாலும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
a) 100
b) 1000
c) 10
d) 70
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.13 “கவலைபடாதீர் ! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என கூறியது
a) மூஸா நபி
b) ஜிப்ரீல்
c) விசுவாசிகள்
d) முஹம்மது நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.14 “நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கிறேன்.நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன்” - கூறியது
a) முஹம்மது நபி
b) ஜிப்ரீல்
c) ஷைத்தான்
d) நூஹ் நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 10.15 யுத்தத்திற்கான ---- கேட்டு சிலர் நபியிடம் வந்தனர்
a) ஆயுதம்
b) வாகனம்
c) கவசம்
d) பணம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment