Thursday, August 27, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 11

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 11

கேள்விக்கான பதில்களை ஸுரா 9 வசனம் 94 முதல் ஸுரா 11 வசனம் 5 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 3, 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 11.1 அல்லாஹ் இவர்களை திருப்தியடைந்தான்

a) முஹாஜிர்களில் முந்தியவர்கள்

b) அன்சார்களில் முந்தியவர்கள்

c) நற்கருமத்தில் a& b பின்பற்றியவர்கள்

d) a & b

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.2 அலிப் லாம் ரா என ஆரம்பிக்கும் சூராக்கள்

a) யூனுஸ் , நஹ்ல்

b) ஹுது , கஹ்ப்

c) யூனுஸ் , ஹுது

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.3 உன்னை உன் தேகத்தோடு காப்பாற்றுவோம்என யாரிடம் கூறப்பட்டது

a) யூனுஸ் நபி

b) ஒரு கிராமவாசி

c) பிர்அவ்ன்

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.4 இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்

a) நீர்

b) நுரை

c) கனவு

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.5 நாம் நமது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அவர்கள் இணைவைத்து கொண்டிருந்தாலும் பாவ மன்னிப்பு கோரலாம்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.6 அல்லாஹ் வானங்கள் மட்டும் பூமியை படைத்தது

a) 8 நாட்களில்

b) 7 நாட்களில்

c) 6 நாட்களில்

d) 3 நாட்களில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.7 அல்லாஹ் தன் வாக்குகளை கொண்டு சத்தியத்தை உண்மையாக்கி வைக்கிறான்– கூறியது

a) முஹம்மது நபி

b) யூனுஸ் நபி

c) இப்ராஹிம் நபி

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.8 சுவனவாசிகள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் காணிக்கை

a) அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோரல்

b) வைரம்

c) நன்மையை ஏவுதல்

d) ஸலாமுன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.9 இருமுறை வேதனை செய்யப் படுபவர்கள்

a) முனாஃபிக்கான கிராமவாசிகள்

b) முனாஃபிக்கான மதீனாவாசிகள்

c) மக்கா காஃபிர்கள்

d) a & b

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.10 தூதர் அனுப்ப படாத சமூகத்தினர்

a) கீழ் பகுதியினர்

b) தென் பகுதியினர்

c) மேல் பகுதியினர்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.11 (புதிய) அத்தியாயம் இறக்கி வைக்கப் பட்டால் ------அதிகரிக்கிறது

a) விசுவாசிகளின் விசுவாசம்

b) இதயத்தில் நோயுடையவர்களின் அசுத்தம்

c) நபியின் பலம்

d) a &b

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.12 விசுவாசிகளின் ----மற்றும் ----- சுவனத்திற்கு பகரமாக வாங்கப்பட்டுள்ளது

a) விளைச்சல் , உயிர்

b) உயிர் , செல்வம்

c) விளைச்சல் , செல்வம்

d) மக்கள் , உயிர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.13 மூஸா,ஹாரூன் சமூகத்தினரின் வீடுகள் ---- ல் அமைக்கப்பட்டன.

a) ஸினாய்

b) மிஸ்ர்

c) பலஸ்தீன்

d) ஓடு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.14 இப்பகுதியில் குர்ஆனின் ---- போன்று ஒன்றை உருவாக்கும்படி சவால் விடப்படுகிறது

a) 10 அத்தியாயம்

b) 1 அத்தியாயம்

c) 10 வசனம்

d) 1 வசனம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 11.15 யூனுஸ் நபியின் சமுதாயம் மொத்தமாக அழிக்கப்பட்டது எப்படி?

a) கல்மாரி

b) கருநிற புயல் காற்று

c) வெள்ளம்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment