Thursday, March 25, 2010

குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி

குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதற்காக பதில் கூற வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. குழந்தைகளிடம் தொழுகையை ஆர்வமூட்டும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே “ MY PRAYER TREE”

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

1) இதனுடன் இணைக்கப்பட்டுள்ள “MY PRAYER TREE” ஐ பிரதி எடுத்து குழந்தையிடம் கொடுத்து வீட்டின் முக்கிய பகுதியில் ஒட்டச் சொல்லவும். ( மாதம் ஒரு பிரதி)

2) பச்சை , மஞ்சள் , சிகப்பு நிற கலர் பென்சில்களை வாங்கிக் கொடுக்கவும்.

3) அதில் குறிப்பிட்டுள்ள 1,2,3,.....31 மாதத்தின் நாட்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளிளும் 5 நேரத் தொழுகையைக் குறிக்க 5 இலைகள் உள்ளன.

4) குறிப்பிட்டுள்ளபடி, ஜமாத்துடன் தொழும் தொழுகையை பச்சை நிறத்திலும், ஜமாத்தில்லாமல் ஆனால் குறித்த நேரத்தில் தொழும் தொழுகையை மஞ்சள் நிறத்திலும், நேரம் தவறிய தொழுகையை சிகப்பு நிறத்திலும் ( அதற்கான இலையை) வண்ணமிட வேண்டும்.

5) மாதத்தின் இறுதியில் வண்ண இலைகளுக்கு மதிப்பெண் வழங்கி , மதிப்பெண்ணிற்கு ஏற்ப பரிசு வழங்கவும்.

6) இன்ஷா அல்லாஹ் சில மாதங்களில் உங்கள் குழந்தை நியமமாக தொழக் கூடியவர்களாக ஆகி விடுவர். நீங்களும் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிய நிம்மதியை அடைவீர்கள்.

குறிப்பு – பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிவோர் தங்கள் வகுப்பின் மொத்த முஸ்லிம் குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்து தொழ ஆர்வமூட்டலாம்.

.

1 comment: