Thursday, July 30, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 7

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 7

கேள்விக்கான பதில்களை ஸுரா 5 வசனம் 90 முதல் ஸுரா 6 வசனம் 118 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 6, 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 7.1 இஹ்ராமுடைய நிலையில் மீன்பிடித்து சாப்பிடக்கூடாது- இக்கூற்று

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.2 அல்லாஹ் தன்மீது கடமையாக்கி கொண்டது

a) கருணை

b) விசுவாசிகளுக்கு அருள்புரிவது

c) தண்டனை செய்தல்

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.3 ஆஜர் என்பது

a) இப்ராஹிம் நபியின் புனைப் பெயர்

b) இப்ராஹிம் நபியின் ஊர்தலைவர் பெயர்

c) இப்ராஹிம் நபியின் தந்தை பெயர்

d) இப்ராஹிம் நபியின் ஊரார் வணங்கிய சிலையின் பெயர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.4 ஷைத்தானுடைய செயலில் உள்ளவை

a) மதுவும் சூதாட்டமும்

b) நடப்பட்டவை (சிலை)கள்

c) குறிபார்க்கும் அம்புகள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.5 வானத்திலிருந்து மாயிதாவை இறக்கி வைக்க கேட்டவர்கள்

a) மூஸா நபியின் கூட்டம்

b) இப்ராஹிம் நபியின் கூட்டம்

c) ஈஸா நபியின் சீடர்கள்

d) முனாஃபிக்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.6 கடல் மற்றும் கரையில் வழியறிவதற்காக அல்லாஹ் படைத்தவை

a) காற்று

b) நட்சத்திரம்

c) தீவுகள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.7 அல்லாஹ் ஏற்படுத்தாத ஆனால் நிராகரிப்போர் அல்லாஹ் மீது பொய்யாக கற்பனை செய்பவற்றில் இது இல்லை

a) பஹிரா

b) ஸாயிபா

c) ஹாம்

d) மஜுஸி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.8 தொட்டு பார்க்கும் படியாக காகிதத்தில் வேதம் இறங்கியிருந்தால் நிராகரிப்போரின் கூற்று என்னவாயிருக்கும்

a) கல்லில் இறங்கியிருக்க கூடாதா?

b) இது சூனியமே

c) இதுவே சத்திய வேதம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.9 ஒன்று போல் உள்ள ஆனால் வெவ்வேறான விசயங்களாக அல்லாஹ் குறிப்பிடுவது

a) சூரியன் , சந்திரன்

b) ஜைத்தூன் , மாதுளை

c) ஆப்பிள் , ஆரஞ்சு

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.10 மார்க்கத்தை விளையாட்டாக , வேடிக்கையாக எடுத்து கொண்டவர்கள் மீது நபியின் பொறுப்பு

a) போரிடல்

b) அவர்களை விட்டுவிடல்

c) துஆ செய்தல்
d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.11 நிராகரிப்போர் நரக தண்டனை உறதியானவுடன் மீண்டும் உலகிற்கு அனுப்பப் பட்டால்

a) நன்மைகள் செய்வர்

b) தீமைகளை விட்டு விலகி இருப்பர்

c) மீண்டும் தடுக்கப் பட்டதன் பக்கம் திரும்புவர்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.12 நான் என் இரட்சகனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை பயப்படுகிறேன் கூறியது

a) ஈஸா நபி

b) இப்ராஹிம் நபி

c) முஹம்மது நபி

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.13 அல்லாஹ் ------ ஐ படைத்திருக்க மக்கள் அவற்றை அல்லாஹ்விற்கு இணையாக்குகின்றனர்

a) மலைகள்

b) ஜின்

c) மலக்குகள்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.14 இப்ராஹிம் நபி இரட்சகன் என நினைத்தவை

a) சூரியன்

b) சந்திரன்

c) நட்சத்திரம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 7.15 அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே கூறியது

a) ஈஸா நபி

b) இப்ராஹிம் நபி

c) முஹம்மது நபி

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Thursday, July 23, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 5-பதில்கள்

Q.No

Answer

Reference

5.1

C

4:24

5.2

D

4:93

5.3

A

4:82

5.4

A

4:65

5.5

B

4:46

5.6

B

4:28

5.7

C

4:76

5.8

D

4:142

5.9

D

4:34

5.10

C

4:97

5.11

D

4:56

5.12

C

4:145

5.13

D

4:119

5.14

D

4:43

5.15

A

4:58

Wednesday, July 22, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 6

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 6

கேள்விக்கான பதில்களை ஸுரா 4 வசனம் 148 முதல் ஸுரா 5 வசனம் 89 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 30 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 6.1 இவர்களை தவிர மற்றவர்கள் தீய வார்த்தைகளை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்

a) போர்வீரர்

b) ஹிஜ்ரத் செய்தவர்

c) அநீதி (லுள்ம்) இழைக்கப் பட்டவர்

d) நபிமார்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.2 அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்து, குழப்பம் செய்பவர்களின் தண்டனை

a) கொல்லப்படல்

b) சிலுவையில் அறையப்படல்

c) மாறுகால் மாறுகை துண்டித்தல்

d) நாடு கடத்தல்

e) ஏதேனும் ஒன்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.3 சத்தியத்தை முறித்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

a) ஆறு ஏழைகளுக்கு உணவு

b) ஆறு ஏழைகளுக்கு ஆடை

c) மூன்று நோன்புகள்

d) ஏதேனும் ஒன்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.4 குர்ஆனுக்கு சாட்சி கூறுபவர்கள்

a) அல்லாஹ்

b) மலக்குகள்

c) முஹம்மது நபி

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.5 வேட்டையாட கூடாத நேரம்

a) 4 புனித மாதங்கள்

b) இஹ்ராமுடைய நிலையில்

c) ரமலானில் நோன்பு வைத்திருக்கும் நிலையில்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.6 அல்லாஹ்வை பகிரங்கமாக காண்பிக்க வேண்டி கூறியவர்கள்

a) காபீல் , ஹாபீல்

b) ஸமூது கூட்டம்

c) பனீ குரைளா

d) மூஸா நபியின் கூட்டம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.7 அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டு இருக்கிறது – இதை கூறியது

a) முனாஃபிக்கள்

b) யூதர்கள்

c) மூஸா நபியின் கூட்டம்

d) இன்ஜீலையுடையவர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.8 இந்த ஜுஸ்வுவில் இதை பற்றி கூறப்பட்டுள்ளது

a) ஒளு

b) தயம்மும்

c) a & b

d) திருட்டு குற்றத்தின் தண்டனை

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.9 இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள் ------ மற்றும் ---- ன் நாவினால் சபிக்கப்பட்டு விட்டனர்

a) அல்லாஹ் , மலக்குகள்

b) தாவூது நபி , ஈஸா நபி

c) யாகூப் நபி , ஈஸா நபி

d) அல்லாஹ் , முஹம்மது நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.10 சிங்கம் ஒன்று, ஆட்டின் ஒரு பகுதியை கடித்து தின்றுவிட்டது. ஆனால் அந்த ஆடு உயிரோடிருக்கிறது. இப்போது அந்த ஆட்டை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்ணலாம்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.11 மறுமையில் -------க்கு பாதகமான சாட்சியாளராக ----- இருப்பார்

a) முனாஃபிக் ,,, முஹம்மது நபி

b) வேதத்தையுடையவர் ,,,, ஈஸா நபி

c) வேதத்தையுடையவர் ,,,, மூஸா நபி

d) இப்லீஸ் ,,,, ஆதம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.12 இஸ்லாம்

a) முஹம்மது நபி ஏற்படுத்திய மார்க்கம்

b) இப்ராஹிம் நபி ஏற்படுத்திய மார்க்கம்

c) அல்லாஹ் பொருந்தி கொண்ட மார்க்கம்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.13 பிரேதத்தை புதைக்கும் முறையை மனிதனுக்கு கற்று கொடுத்தது

a) ஜிப்ரீல்

b) நாய்

c) காகம்

d) மலக்குல் மவ்த்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.14 ஈஸா இப்னு மர்யம்

a) அல்லாஹ்வின் ரஸூலும் , வாக்கும்

b) ஜபூர் வேதம் கொடுக்கப் பட்டவர்

c) அல்லாஹ்விலிருந்து ஓர் ஆன்மா (ரூஹ்)

d) a & c

) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 6.15 நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன்–இதை கூறியது யார்? யாரிடம் கூறப்பட்டது?

a) ஷைத்தான் ,,,,, காஃபிர்களிடம்

b) மூஸா ,,,, இஸ்ராயீலின் மக்களிடம்

c) இஸ்ராயீல் ,,,. தன் மக்களிடம்

d) அல்லாஹ் ,,,, இஸ்ராயீலின் மக்களிடம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)