Thursday, March 25, 2010

குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி

குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதற்காக பதில் கூற வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. குழந்தைகளிடம் தொழுகையை ஆர்வமூட்டும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே “ MY PRAYER TREE”

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

1) இதனுடன் இணைக்கப்பட்டுள்ள “MY PRAYER TREE” ஐ பிரதி எடுத்து குழந்தையிடம் கொடுத்து வீட்டின் முக்கிய பகுதியில் ஒட்டச் சொல்லவும். ( மாதம் ஒரு பிரதி)

2) பச்சை , மஞ்சள் , சிகப்பு நிற கலர் பென்சில்களை வாங்கிக் கொடுக்கவும்.

3) அதில் குறிப்பிட்டுள்ள 1,2,3,.....31 மாதத்தின் நாட்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளிளும் 5 நேரத் தொழுகையைக் குறிக்க 5 இலைகள் உள்ளன.

4) குறிப்பிட்டுள்ளபடி, ஜமாத்துடன் தொழும் தொழுகையை பச்சை நிறத்திலும், ஜமாத்தில்லாமல் ஆனால் குறித்த நேரத்தில் தொழும் தொழுகையை மஞ்சள் நிறத்திலும், நேரம் தவறிய தொழுகையை சிகப்பு நிறத்திலும் ( அதற்கான இலையை) வண்ணமிட வேண்டும்.

5) மாதத்தின் இறுதியில் வண்ண இலைகளுக்கு மதிப்பெண் வழங்கி , மதிப்பெண்ணிற்கு ஏற்ப பரிசு வழங்கவும்.

6) இன்ஷா அல்லாஹ் சில மாதங்களில் உங்கள் குழந்தை நியமமாக தொழக் கூடியவர்களாக ஆகி விடுவர். நீங்களும் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிய நிம்மதியை அடைவீர்கள்.

குறிப்பு – பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிவோர் தங்கள் வகுப்பின் மொத்த முஸ்லிம் குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்து தொழ ஆர்வமூட்டலாம்.

.

Winners

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

..

பாகம் 16 முதல் 30 வரையான இறுதி வேதம் போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.


குர்ஆனை தொடர்ந்து பொருளுணர்ந்து படித்ததன் மூலம் நம் அனைவருக்கும் அல்லாஹ் நன்மையை வாரி வழங்கட்டும் என துஆச் செய்கிறோம்.இந்நன்மைகளை பெறுவதன் மூலம் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்.


எனினும் இறுதி வேதம் போட்டிக் குழு சார்பாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கு சிறப்பு பரிசளிப்பதில் பெருமிதமடைகிறோம்.பரிசு பெறுபவர்கள்

வரிசை

பெயர்

மதிப்பெண் (450க்கு)

நாடு

முதல்

சகோ. அன்னு இப்ராஹீம்

450

சவூதி அரேபியா

முதல்

சகோ.முஹம்மது சிராஜுத்தீன்

450

குவைத

இரண்டாவது

சகோ. அப்பாஸ் ஷாஜஷான்.

448

சவூதி அரேபியா

இரண்டாவது

சகோ.மரியம் பீவி

448

இந்தியா

மூன்றாவது

சகோ. செய்யது அலி

447

சவூதி அரேபியா

Thursday, January 28, 2010

இறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 30

Part 30 / ஜுஸ்வு 30
Q.No
Answer
Reference
30.1
c
97:3
30.2
b
83:7 (or) 9
30.3
a
90:12 (or) 13
30.4
c
101:11
30.5
a
87:19
30.6
b
104:6
30.7
a
83:27
30.8
b
81:20,21
30.9
d
96:16
30.10
a
78:1,2
30.11
d
110:3
30.12
c
83:18 (or) 20
30.13
d
93:6,7,8
30.14
d
85:1,86:11
30.15
d
113:1,2,3,4

Wednesday, January 20, 2010

இறுதிவேதம் - பதில்கள் - ஜுஸ்வு 29

Part 29 / ஜுஸ்வு 29

Q.No

Answer

Reference

29.1

a

67:2

29.2

b

69:32

29.3

b

74:30

29.4

d

70:9

29.5

c

75:29

29.6

c

72:1

29.7

c

70:4

29.8

b

68:16

29.9

b

77:30

29.10

a

71:23

29.11

d

76:8

29.12

c

69:17

29.13

a

75:9

29.14

c

71:26

29.15

d

75:17,19

Thursday, January 14, 2010

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 30

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 30

கேள்விக்கான பதில்களை ஸுரா 78 வசனம் 1 முதல் ஸுரா 114 வசனம் 6 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 21 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 30.1 கண்ணியமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) ------ வருடங்களை விடச் சிறந்தது.

a) 1000

b) 10

c) 83

d) 100

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.2 ஸிஜ்ஜீன் என்றால் என்ன?

a) சிறைக்கூடம்

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) ஜைத்தூன் பழம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.3 அகபாஎன்றால் என்ன?

a) அடிமையை விடுதலை செய்தல்

b) நரக மரம்

c) கஃபாவின் பள்ளத்தாக்கு

d) கஃபாவின் திரை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.4 “ஹாவியாஎன்றால் என்ன?

a) நரகத்தின் வாசல்

b) கியாம நாள்

c) கடுமையாக சூடேற்றப்பட்ட நெருப்பு

d) சுவன நீரூற்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.5 இப்ராஹிம் நபி, மூஸா நபி இருவருக்கும் ஸுஹுபுகள் (ஆகமங்கள்) கொடுக்கப்பட்டன.

a) சரி

b) தவறு. ஏனெனில் மூஸா நபிக்கு கொடுக்கப்படவில்லை.

c) தவறு. ஏனெனில் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்படவில்லை.

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.6 ஹுதமாஎன்றால் என்ன?

a) புறம் பேசுதல்

b) எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பு

c) கியாம நாள்

d) கள்ளி மரம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.7 தஸ்னீம் என்பது

a) சுவன நீரூற்று

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) சுவன வாசல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.8 அவர் சக்கியுடையவர். அர்ஷுக்குரியவனிடம் பெரும் பதவியுடையவர்.கீழ்படியப்படுபவர். இங்கு அவர் எனக் குறிப்பிடப்படுபவர்

a) முஹம்மது நபி

b) ஜிப்ரீல்

c) இப்ராஹிம் நபி

d) இஸ்ராபீல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.9 ------- முன்நெற்றி உரோமத்தை ( நாஸியத்) பிடித்து இழுப்போம்

a) தவறிழைக்கும் ( காதிபத்)

b) பொய்யுரைக்கும் ( kகாதிஅத்)

c) வலுவான

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.10 --------- பற்றி ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கின்றனர்

a) நபயிள் அளீம் ( மகத்தான செய்தி)

b) ஜஹன்னம் ( நரகம்)

c) பத்ஹ் மக்கா

d) கஃபா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.11 நமக்கு அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி வந்தால்

a) அல்லாஹ்வைப் புகழ வேண்டும்

b) ஸதகா செய்ய வேண்டும்

c) தவ்பா செய்ய வேண்டும்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.12 இல்லிய்யூன் என்றால் என்ன?

a) சுவன மரம்

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) சுவன வாசல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.13 நபியே! உம்மை உமதிரட்சகன் ------ ஆகக் கண்டான்.

a) யதீம் ( அநாதை)

b) ளால்லன் ( தெரியாதவர்)

c) ஆயிலன் ( தேவையுடையவர்)

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.14 ------ உடைய வானத்தின் மீது சத்தியமாக!

a) நஜ்ம்

b) இன்ஷிகாக்

c) காரியா

d) புரூஜ் & ரஜ்இ

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.15 வைகறையின் இரட்சகனிடம் ------ தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

a) அவன் படைத்தவற்றின்

b) பரவும் இருளின்

c) முடிச்சுகளில் ஊதும் பெண்களின்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)