Wednesday, November 4, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 21

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 21

கேள்விக்கான பதில்களை ஸுரா 29 வசனம் 45 முதல் ஸுரா 33 வசனம் 30 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 12 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 21.1 தொழுகை நம்மை ----- மற்றும் ------ லிருந்து தடுக்கும்

a) மானக்கேடானது ,,,,,,, மறுக்கப்பட்டது

b) குஃப்ர்,,,,,, ஷிர்க்

c) வீணாணது,,,,,, மறதி

d) மானக்கேடானது,,,,,,, ஷிர்க்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.2 எல்லா மனிதர்களும் ------ இல் படைக்கப்பட்டுள்ளனர்.

a) அறிவீனத்தில்

b) அவசரத்தில்

c) இயற்கை மார்க்கத்தில்

d) அன்பில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.3 அல்லாஹ்வின் வேதத்தைப் பின்பற்றாமல் மூதாதையரின் செயல்களைப் பின்பற்றுவோரை அல்லாஹ் கண்டிக்கிறான்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.4 -------- வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது

a) மக்கா

b) உஹத்

c) தாகூத்

d) ரோமாபுரி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.5 அல்லாஹ்வின் தூதரிடம் நமக்கு ----- உள்ளது

a) அருள்

b) உஸ்வத்துல் ஹஸனா (அழகிய முன்மாதிரி)

c) கைர் ( நன்மை)

d) ஆயாத் ( அத்தாட்சி)

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.6 மதீனா (மதீனத்துன் நபி) வின் பழைய பெயர்

a) மதீனத்து அவ்ஸ்

b) அன்ஸாரிய்யா

c) யத்ரிப்

d) குபா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.7 அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

a) மனிதர்களின் மாறுபட்ட மொழி, நிறம்

b) கணவன்,மனைவியிடையே உள்ள அன்பு

c) மின்னல்

d) பூமியில் பரவியுள்ள மனிதர்கள்

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.8 நரகத்தில் மனிதர்களுடன் ஜின்களும் இருக்கும்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.9 மக்கா காபிர்கள் “லாத்“ என்ற சிலை வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பதாக நம்பினர்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.10 அல்லாஹ்விற்கு இணைவைத்தல் பெரும் பாவம்என லுக்மான் -----இடம் கூறினார்.

a) மைந்தன்

b) தந்தை

c) சகோதரன்

d) தாயார்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.11 கரையிலும், கடலிலும் வெளிப்படும் குழப்பம் , அழிவுகளின் காரணம்

a) தொழுகையை பேணாதது

b) மனிதர்களின் கைகள் சம்பாதித்தவை

c) பூமி வெப்பமயமாதல்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.12 அல்லாஹ் மட்டுமே அறிந்தவை

a) மறுமை நாள் , மழை பற்றிய அறிவு

b) கர்பத்தில் உள்ளவை , மரண இடம் , மழை பற்றிய அறிவு

c) மறுமை நாள் , நாளைய சம்பாதிப்பு பற்றிய அறிவு

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.13 திருக்குர்ஆனுக்கு முன்னர் இன்ஜீல் வேதத்தை ஓதுபவராக முஹம்மது நபி இருந்தார்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.14 முஹம்மது நபியின் வளர்ப்பு பிள்ளையின் பெயர் ஜைத். அவரை ஜைத் இப்னு முஹம்மது என அழைக்கலாம்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 21.15 அல்லாஹ் அவனுக்கும் ------க்கும் நன்றி செலுத்துமாறு கூறுகிறான்

a) தூதர்

b) பெற்றோர்

c) எஜமானன்

d) அருட்கொடை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment