Thursday, June 11, 2009

இறுதி வேதம் - பொதுவான விதிகள்

இறுதி வேதம் – பொதுவான விதிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் (நிய்யத்) அடிப்படையிலேயே அமையும்” - அறிவிப்பாளர் – உமர் (ரலி) . (புகாரி)

அல்ஹம்துலில்லாஹ். நாம் குர்ஆனின் கருத்துகளைப் படிக்க வேண்டுமென நிய்யத் வைத்து விட்டோம் .அல்லாஹ் நம் நிய்யத்தை பொருந்தி இக்காரியத்தை நமக்கு இலேசாக்கட்டும்

சகோதர , சகோதரிகளே.... ஷைத்தான் நம்முள்ளும், நம்மை சுற்றியும் இருக்கிறான். நம்மை குர்ஆனின் கருத்துகளை அறிவதை தடுக்க முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.

ஷைத்தானுக்கு எதிரான உதவியையும், நேர்வழியையும் அல்லாஹ்விடமே வேண்டுவோம்.

நாங்கள் இப்போட்டியை திறம்பட நடத்தவும், எங்கள் முயற்சியை அல்லாஹ் பொருந்தி கொள்ளவும் துஆ செய்யுங்கள்.

இனி – பொதுவான விதிகள்

1) போட்டி இன்ஷா அல்லாஹ் ஜுன் 18 முதல் நடக்கும்
2) கேள்விகள் ஒவ்வொரு வியாழன் அன்றும் அனுப்ப்ப்படும்
3) முதல் ஜுஸ்விலிருந்து ஆரம்பமாகும்
4) ஒரு வாரம் ஒரு ஜுஸ்வு என்ற வீதத்தில் இருக்கும்
5) அனைத்து கேள்விகளும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும் என்ற வடிவில் இருக்கும்
6) ஒருவாரத்திற்குள் பதில்களை அனுப்ப வேண்டும்
7) நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது

Wednesday, June 3, 2009

இறுதி வேதம்- பரிசுப் போட்டி

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

kdpjHfNs! cq;fs; ,iwtdplkpUe;J cq;fSf;F epr;rakhf xU ey;YgNjrKk; te;Js;sJ. (cq;fs;) ,jaq;fspYs;s Neha;fSf;F mUkUe;Jk; (te;jpUf;fpwJ¢ ) NkYk; (mJ) K/kpd;fSf;F NeHtopfhl;bahfTk;> ey;yUshfTk; cs;sJ. (10:57)

,d;Dk;> ehk; K/kpd;fSf;F u`;kj;jhfTk;> mUkUe;jhfTk; cs;stw;iwNa FHMdpy; (gbg;gbahf) ,wf;fpitj;Njhk; (17:82)

NkYk; mtHfs; ,e;jf; FHMid Muha;e;J ghHf;f Ntz;lhkh? my;yJ mtHfs; ,Ujaq;fs; (,Uf;fpd;wdNt) mtw;wpd; kPJ G+l;Lg; Nghlg;gl;L tpl;ldth? (47: 24)

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களே குர்ஆனின் பொருளை அறிவதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை. இஸ்லாமிய அழைப்பு மையம்-யான்பு பலத் தமிழ் பேசும் மக்களுக்காக குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்ட வேண்டி ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது . அதுவே

இறுதி வேதம்

போட்டியின் நோக்கம் : தமிழ் பேசும் மக்களை குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்டுதல்

எப்போது நடக்கும்? : ஜூன்-2009 முதல் டிசம்பர்-2009 வரை இன்ஷா அல்லாஹ்

போட்டி எவ்வாறு நடக்கும்?

ஒவ்வொரு வியாழன் அன்றும் தாவா சென்டரில் நடக்கும் வாராந்திர வகுப்பில் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ ஒரு ஜூஸ்விலிருந்து கேள்விகள் கொடுக்கப்படும். அதற்கான பதிலை கண்டுபிடித்து அடுத்த வாரம் வியாழனுக்குள் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும். இப்படியாக 30வாரம் 30 ஜூஸ்வு முடிக்கப்படும்

நீங்கள் செய்ய வேண்டியதென்ன?

· போட்டியில் உங்களது பெயரை பதிவு செய்தல்

· தினமும் திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை படித்தல்.

· ஒவ்வொரு வாரமும் கேள்வித்தாள் கிடைத்தவுடன் பதிலை கண்டுபிடித்து ஒரு வாரத்திற்குள் அனுப்புதல்

பரிசு

திருக்குர்ஆனின் பொருளை அறிய முற்படும்போது , அறியும்போது இறைவன் கொடுக்கும் நன்மைகளுக்கு முன் எந்த பரிசும் சமமாகாது. எனினும் ஆர்வமுட்ட வேண்டி நேரில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 5 ஜூஸ்வு முடிவிலும், இமெயிலில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 15 ஜூஸ்வு முடிவிலும் மூன்று சிறப்பு பரிசுகள் உண்டு

அல்லாஹ்வின் மலக்குகள் உங்களுக்கு நன்மையை எழுத காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஷைத்தான் இப்போட்டியிலிருந்து உங்களை தடுக்க காத்துக்கொண்டிருக்கிறான்.

யாரை தேர்ந்தெடுப்பது என்ற முடிவு உங்கள் கையில்.

தொடர்புக்கு : tdcyanbu@gmail.com

Friday, May 8, 2009

அர்ஷின் நிழல்

நபிகள் (ஸல்) கூறினார்கள் “தன் நிழலை தவிர வேறு நிழல் இல்லாத (நியாய தீர்ப்பு) நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்

1) நீதமான அரசர்.

2)இறைவணக்கத்தில் வளர்ந்த வாலிபர்.

3)மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.

4)அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள்.

5)அந்தஸ்தும்,அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த போதும் நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என கூறும் மனிதர்.

6)தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்.

7)தனிமையில் அல்லாஹ்வை நினைவுகூறி அதனால் அவரின் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.

இக்கூட்டத்தினரில் ஒருவராக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!