அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
” செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் (நிய்யத்) அடிப்படையிலேயே அமையும்” - அறிவிப்பாளர் – உமர் (ரலி) . (புகாரி)
அல்ஹம்துலில்லாஹ். நாம் குர்ஆனின் கருத்துகளைப் படிக்க வேண்டுமென நிய்யத் வைத்து விட்டோம் .அல்லாஹ் நம் நிய்யத்தை பொருந்தி இக்காரியத்தை நமக்கு இலேசாக்கட்டும்
சகோதர , சகோதரிகளே.... ஷைத்தான் நம்முள்ளும், நம்மை சுற்றியும் இருக்கிறான். நம்மை குர்ஆனின் கருத்துகளை அறிவதை தடுக்க முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.
ஷைத்தானுக்கு எதிரான உதவியையும், நேர்வழியையும் அல்லாஹ்விடமே வேண்டுவோம்.
நாங்கள் இப்போட்டியை திறம்பட நடத்தவும், எங்கள் முயற்சியை அல்லாஹ் பொருந்தி கொள்ளவும் துஆ செய்யுங்கள்.
இனி – பொதுவான விதிகள்
1) போட்டி இன்ஷா அல்லாஹ் ஜுன் 18 முதல் நடக்கும்
2) கேள்விகள் ஒவ்வொரு வியாழன் அன்றும் அனுப்ப்ப்படும்
3) முதல் ஜுஸ்விலிருந்து ஆரம்பமாகும்
4) ஒரு வாரம் ஒரு ஜுஸ்வு என்ற வீதத்தில் இருக்கும்
5) அனைத்து கேள்விகளும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும் என்ற வடிவில் இருக்கும்
6) ஒருவாரத்திற்குள் பதில்களை அனுப்ப வேண்டும்
7) நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது