Showing posts with label நியாய தீர்ப்பு. Show all posts
Showing posts with label நியாய தீர்ப்பு. Show all posts

Friday, May 8, 2009

அர்ஷின் நிழல்

நபிகள் (ஸல்) கூறினார்கள் “தன் நிழலை தவிர வேறு நிழல் இல்லாத (நியாய தீர்ப்பு) நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்

1) நீதமான அரசர்.

2)இறைவணக்கத்தில் வளர்ந்த வாலிபர்.

3)மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.

4)அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள்.

5)அந்தஸ்தும்,அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த போதும் நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என கூறும் மனிதர்.

6)தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்.

7)தனிமையில் அல்லாஹ்வை நினைவுகூறி அதனால் அவரின் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.

இக்கூட்டத்தினரில் ஒருவராக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!