Showing posts with label part 14. Show all posts
Showing posts with label part 14. Show all posts

Wednesday, October 7, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 14 -பதில்கள்

Part 14 / ஜுஸ்வு 14

Q.No

Answer

Reference

14.1

d

16:125

14.2

d

15:18

14.3

b

16:1

14.4

d

15:73,74

14.5

c

16:69

14.6

d

15:57

14.7

c

16:66

14.8

a

15:87

14.9

c

15:44

14.10

d

16:49

14.11

a

16:98

14.12

b

15:65

14.13

a

16:30

14.14

c

15:80 (or)82

14.15

a

15:9

Thursday, September 17, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 14

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 14

கேள்விக்கான பதில்களை ஸுரா 15 வசனம் 1 முதல் ஸுரா 16 வசனம் 128 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 24 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 14.1 அழைப்பு பணியினை செய்யும் முறை

a) விவேகமான அணுகுமுறையுடன்

b) அழகிய நல்லுபதேசம் மூலம்

c) அழகானதை கொண்டு விவாதித்தல்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.2 வானத்தில் திருட்டுத்தனமாக ஒட்டுகேட்கும் ஷைத்தானை பின்தொடர்வது

a) மலக்குகள்

b) அவனது வாரிசுகள்

c) தீமைகள்

d) பிரகாசமான தீப்பந்தம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.3 ------ வந்துவிட்டது. அதை பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்

a) கலாமுல்லாஹ்

b) அம்ருல்லாஹ்

c) யவ்மித்தீன்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.4 லூத் நபியின் சமூகம் அழிக்கப்பட்டது எப்படி?

a) பேரிடி முழக்கம்

b) ஊரை மேல் கீழாக மாற்றி

c) சுடப்பட்ட கற்கள் மூலம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.5 தேனீக்களின் -----லிருந்து மாறுபட்ட நிறமுடைய பானம் வெளிவாகிறது

a) கொடுக்கு

b) முன்கால்

c) வயிறு

d) இறக்கை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.6 தூதர்களே (அய்யுஹல் முர்ஸலூன்) உங்கள் செய்தி என்ன? என கேட்டது

a) லூத் நபி

b) தேனீக்களின் கூட்டம்

c) ஸமூது கூட்டம்

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.7 கால்நடைகளின் ----- மற்றும் ------ க்கு இடையே பால் கிடைக்கிறது

a) முன்கால் ,,,, பின்கால்

b) தண்ணீர் ,,,, இரத்தம்

c) கழிவு ,,,, இரத்தம்

d) தண்ணீர் ,,,, கழிவு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.8 இப்பகுதியில் “அல் ஃபாத்திஹாஅத்தியாயத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.9 நரகத்தின் வாசல்கள்

a) 9

b) 8

c) 7

d) 99

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.10 -------பெருமையடிக்க மாட்டார்கள்

a) நபிமார்கள்

b) ஸித்தீகீன்கள்

c) அவ்லியாக்கள்

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.11 குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் போது “ அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்என கூற வேண்டும்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.12 லூத் நபி இரவின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறினார். அப்போது லூத் நபி

a) குடும்பத்தினருக்கு முன்பாக நடந்து சென்றார்

b) குடும்பத்தினரை பின் தொடர்ந்து சென்றார்

c) திரும்பி பார்த்தார்

d) மனைவியையும் அழைத்து சென்றார்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.13 பயபக்தி உடையோரிடம் உங்கள் இரட்சகன் எதை இறக்கி வைத்தான் என கேட்கப்பட்டால், அவர்கள் பதில்

a) நன்மையை (ஃகைர்)

b) அருளை (பள்ல்)

c) உண்மையை (ஹக்)

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.14 மலைகளை குடைந்து வீடுகளை அமைத்தவர்கள்

a) லூத் நபியின் சமூகம்

b) மத்யன்வாசிகள்

c) ஹிஜ்ர்வாசிகள்

d) யஃஜுத் மஃஜுத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 14.15 குர்ஆனை பாதுகாப்பது

a) அல்லாஹ்

b) ஆலிம்கள்

c) மனனம் செய்தவர்கள்

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)