Thursday, January 7, 2010

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 29

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 29

கேள்விக்கான பதில்களை ஸுரா 67 வசனம் 1 முதல் ஸுரா 77 வசனம் 50 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 14 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 29.1 வாழ்வும்,மரணமும் படைக்கப்பட்டது எதற்காக?

a) செயலால் யார் அழகானவர் என சோதிக்க

b) நரகத்தை நிரப்ப

c) வீணுக்காக

d) வணக்கத்திற்காக

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.2 நரகவாசி ----- முழம் நீளமுள்ள சங்கிலியால் கட்டப்படுவான்.

a) 100

b) 70

c) 10

d) 33

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.3 ஸகர் என்னும் நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கை

a) 99

b) 19

c) 8

d) 9

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.4 கியாம நாளில் ----- சாயம் ஏற்றப்பட்ட பஞசைப் போல் ஆகிவிடும்.

a) பூமி

b) வானம்

c) சூரியன்

d) மலைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.5 கெண்டைக்கால் கெண்டைக்காலோடு பின்னிக் கொள்ளும் - எப்போது?

a) மஹ்ஷரில்

b) நரகில்

c) மரண வேளையில்

d) சுவனத்தில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.6 “நாங்கள் மிக ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்—இது யார் கூறியது?

a) மதீனாவாசிகள்

b) யமன்வாசிகள்

c) ஜின்கள்

d) ரோம்வாசிகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.7 மலக்குகளும், ஜிப்ரீலும் அல்லாஹ்வின் பக்கம் ஒருநாள் உயர்ந்து செல்வர். அந்நாளின் அளவு

a) 1000 வருடங்கள்

b) 5000 வருடங்கள்

c) 50000 வருடங்கள்

d) 100 வருடங்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.8 குர்ஆனை முன்னோர்களின் கட்டுக்கதை என்பவனின் ---- மீது அடையாளமிடப்படும்.

a) நாக்கு

b) மூக்கு

c) நெற்றி

d) மார்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.9 நரகவாசிகள் ----- கிளைகளையுடைய நிழலின் பால் நடந்து செல்வர்

a) 2

b) 3

c) 8

d) 19

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.10 இப்பூமியில் முதன் முதலில் உண்டாக்கப்பட்ட விக்கிரகங்கள்.

a) வத்து, ஸுவா, யகூஸ், யஊக், நஸ்ர்

b) லாத், உஸ்ஸா, மனாத்

c) பஅல்

d) புக்கத் நஸ்ஸார்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.11 மறுமையை பயப்படுபவர்கள் அல்லாஹ் மீதுள்ள அன்பினால் ---- க்கு உணவளிப்பர்.

a) ஏழை

b) அநாதை

c) சிறைபட்டவர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.12 மறுமை நாளில் இரட்சகனின் அர்ஷை ----- பேர் சுமப்பர்.

a) 4

b) 100

c) 8

d) 19

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.13 கியாம நாளின் போது சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.14 ரப்பே! நிராகரிக்கும் ஒருவரைக்கூட பூமியில் வசிக்க விட்டு வைக்காதேஎனப் பிரார்த்தித்தவர்

a) ஜிப்ரீல்

b) மூஸா நபி

c) நூஹ் நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.15 அல்லாஹ் தன் மீது கடமையாகச் சொல்வது எதை?

a) குர்ஆனை ஒன்று சேர்ப்பது

b) குர்ஆனை ஓதச் செய்வது

c) குர்ஆனைத் தெளிவு செய்வது

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment