Friday, May 8, 2009

அர்ஷின் நிழல்

நபிகள் (ஸல்) கூறினார்கள் “தன் நிழலை தவிர வேறு நிழல் இல்லாத (நியாய தீர்ப்பு) நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்

1) நீதமான அரசர்.

2)இறைவணக்கத்தில் வளர்ந்த வாலிபர்.

3)மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.

4)அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள்.

5)அந்தஸ்தும்,அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த போதும் நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என கூறும் மனிதர்.

6)தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்.

7)தனிமையில் அல்லாஹ்வை நினைவுகூறி அதனால் அவரின் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.

இக்கூட்டத்தினரில் ஒருவராக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! 

3 comments:

  1. assalmu alaikum, nalla idaukaiyai alitha ungaluku ellam valla iraivanin arul kidakattumaga.....

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும், உங்களுடைய ப்லொக்கில் அர்ஷுடைய நிழல் ஏழு நபர்களுக்கு இறைவன் கொடுப்பதாக வாக்களித்த அந்த ஹதீஸை படித்தேன் .அல்ஹம்துலில்லஹ் !! . இந்த தூய எண்ணத்திற்காக அல்லா உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக !!!!!!!!!!!.
    ஆனால் நான்காவது பிரிவில் பிழை இருபது போல் உணர்கிறேன்.
    "அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள்."
    ஆனால் ஹதீஸில் " அல்லாஹ்வுக்காக நட்பு வைத்து அவனுக்காக பிரிந்த இரு நண்பர்கள்" இப்படிதான் இருக்கிறது என்பத்தி தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete