Thursday, June 18, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 1

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 1

கேள்விக்கான பதில்களை ஸுரா 1 வசனம் 1 முதல் ஸுரா 2 வசனம் 141 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண், வசன எண் மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுன் 25 , 2009.

கேள்வி 1.1 இறைவா! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! ------- மற்றும்----- ன் வழியில் அல்ல.


a) முனாஃபிக் , காஃபிர்

b) அல்லாவின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர்

c) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்

d) ஷைத்தான் , இப்லீஸ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.2 முன்ஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும இல்லை. இவர்களுக்கு உதாரணம்

a) நெருப்பு மூட்டிய ஒருவன் அல்லாஹ் அவர்கள் ஒளியை அணைத்துவிட்டான்

b) காரிருள்,இடி,மின்னல் கலந்த மழை

c) a மற்றும் b

d) கல்லில் பெய்யும் மழை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:


கேள்வி 1.3 இது வேதமாகும்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது ---------க்கு வழிகாட்டி


a) உலக மக்களுக்கு

b) நபிமார்களுக்கு

c) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்)

d) முஹம்மது நபி உம்மத்திற்கு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.4 “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று


a) ஆதம் மற்றும் ஹவ்வா

b) மூஸா மற்றும் ஹாரூன்

c) நூஹ் நபி

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.5 மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்


a) 30

b) 100

c) 40

d) 28

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.6 இறைநிராகரிப்பாளர்களின்--------- மற்றும் ------- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ,,,,------ல் திரை உள்ளது


a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை

b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம்

c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன்

d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.7 அல்லாஹ்-------- அல்லது அதைவிட அற்பத்தில் மேலானதை உதாரணம் கூற வெக்கப்பட மாட்டான்.


a) ஈ

b) கொசு

c) எறும்பு

d) யானை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.8 மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டி கட்டளையிடப்பட்ட வார்த்தை


a) அஸ்ஸலாம்

b) அல்லாஹூ அக்பர்

c) பதஹ்

d) ஹித்ததுன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.9 குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்


a) வெள்ளிக்கிழமை தொழாதவர்கள்

b) சனிக்கிழமை வரம்புமீறியவர்கள்

c) ஸாலிஹ் நபியின் உம்மத்

d) ஹூத் நபி உம்மத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.10 மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்


a) கறுப்பு கலந்த வெண்மை

b) தூய வெண்மை

c) கெட்டியான மஞ்சள்

d) தூய கறுப்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.11 ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்


a) பலஸ்தீன்

b) மதீனா முனவ்வரா

c) பாபிலோன்

d) அபிசீனியா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.12 அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்

a) ஈஸா நபி

b) முஹம்மது நபி

c) மூஸா நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.13 ரப்பனா தகப்பல் மின்னா! (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக!) இது யாருடைய கூற்று

a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.14 அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன் இது யாருடைய கூற்று


a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.15 மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை


a) 10

b) 9

c) 12

d) 15

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

2 comments:

 1. Assalamu Alaikkum,

  Receipt of your Ist Question set and I am very much interested to fill the correct answres from Quran and Tharjuma. I fill the answers with a single sitting with time gap of two hours. I very much like the question pattern and the way it was asked.May
  definitly there will be good credit form the Allah. I suggest you to Provide certificates with scores for every suzu answers for all, and finaly provide the overall merit certificates. It will helpful for young boys and girls and also increases the possiblity of participation. The certificates will useful for childrens for their future.

  ReplyDelete
 2. Wa Alaikum Salam warah...Dear brother bashir
  Thanks for your comment.
  We discussed your proposal. there are lots of practical difficulties in issuing certificates as people from all over the world are participating . still we consider it. Insa allah we try our best possible.

  ReplyDelete